"இக்கதையின் நோக்கம் காற்றாலைகளை எதிர்ப்பதோ அந்த நிறுவனங்களை எதிர்ப்பதோ இல்லை. காற்றாலை பெயரால் செய்யும் அக்கரமங்களை வெளிக்கொணர்வதே ஆகும்"
நான் ஒரு விவசாய பின்னனியைக் கொண்ட நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன்.நான் வசிக்கும் ஊர் மற்றும் எங்கள் சுற்று வட்டாரத்தில் நடந்த சம்பவங்களையும் காற்றாலை பற்றிய எனது ஈறிவையும் உங்களிடம் இப்பதிவில் பகிர்ந்து கொள்ள எண்ணுகிரேன்.
காற்றாலை செயல்படும்முறை:
காற்றாலை பற்றி ஓரளவுக்கு அனைவருக்கும் தெரிந்ததுதான்.காற்றாலைகள் பூமியின் மேற்புர அடுக்கிள் வீசும் காற்றின் வேகத்தால் காற்றாலை இறக்கைகள் சுழல்வதின்மூலம் மின்சாரம் உர்பத்தி செய்கிறது.
காற்றாலையில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் எவ்வளவு மக்கள் பயன்பாட்டிறக்கு அழிக்கப்படுகிறது?
காற்றாலை மின்சாரத்தில் 70% மேற்பட்ட மின்சாரங்கள் தனியார் நிருவனஙகளே உபயோகிக்கின்றன.ஆனால் அதை நான் தவறு என்று கூர வரவில்லை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் குரிப்பிடுகிரேன்.பெரிய நிறுவனங்கள் தங்களது மின்தேவையை பூர்த்தி செய்வதர்காக காற்றாலைகளை நறுவுகிறது.இந்தியாவைப் பொறுத்தவரை கடற்கறை மாநிலங்களில் இவை பெரும்பாலும் நிருவப்படுகிறது.ஏனெனில் இங்கும் கனவாய்ப் பகுதிகளிலுமே காற்றின் வேகம் அதிவேகமாக இருக்கும்.தமிழ்நாட்டைப் பொருத்தவரை நான்கு மாவட்டங்களில் அதிகமாக காற்றாலை நிருவப்படுகிறது.அவை தேனி,நெல்லை,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி. அதிலும் ஆரல்வாய்மொழி கனவாய் மற்றும் கயத்தாறு பகுதிகள் அதிகளவிள் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் இடமாக குறிப்பிடப்படுகிறது.
"தனியார் நிறுவனங்கள் தங்கள் தேவைகளுக்காக நிறுவுகின்றன.மற்றும் 70% மின் பயன்பாடு தனியார் வசமே உள்ளது"
காற்றாலை நிறுவுவதற்கான அம்சங்கள்:
காற்றாலையின் அளவு மற்றும் உற்பத்தி தறனைப்பொறுத்து அதற்குத்தேவையான நிலம் தேவைப்படும். இதனை காற்றாலை நலம் அளப்போர் point என அழைப்பார்கள்.
காற்றாலை எனக்கு தெரிந்த வகையில்மூன்று விதமாக பிரிக்கிறேன்.அவை:
- சிறிய அளவுக்காற்றாலை(1250-1500MW)
- பொதுவான அளவுகொண்டவை(1500MW மேல்)
- பெறிய காற்றாலை(2000-2500MW)
இதன் அடிப்படையில் காற்றாலை அமைப்பதற்கான விதிமுறை அமைகிறது.அவை:
- சிறிய காற்றாலைகளுக்கு 69.8 சென்ட் நிலமும்
- மிதமான அளவுகொண்ட காற்றாலைக்கு 79.8சென்ட் நிலமும்
- பெரிய அளவு காற்றாலைகளுக்கு 89.8 சென்ட் நலமும் தேவைப்படும்.
- மற்றும் இரு காற்றாலைகளுக்கிடையே 100m முதல் 110m இடைவெளி இருக்க வேண்டும்.
- மக்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் அமைக்கப்படும் காற்றாலையானது காற்றாலை நிழல் மக்கள் வசிப்பிடத்தின் மீது படாதபடி அமைக்க வேண்டும்.
ஆனால் பெரும்பாலான காற்றாலைகள் இதனை கடைபிடிப்பதில்லை.
- சிறிய காற்றாலைகளுக்கு 69.8 சென்ட் நிலமும்
- மிதமான அளவுகொண்ட காற்றாலைக்கு 79.8சென்ட் நிலமும்
- பெரிய அளவு காற்றாலைகளுக்கு 89.8 சென்ட் நலமும் தேவைப்படும்.
- மற்றும் இரு காற்றாலைகளுக்கிடையே 100m முதல் 110m இடைவெளி இருக்க வேண்டும்.
- மக்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் அமைக்கப்படும் காற்றாலையானது காற்றாலை நிழல் மக்கள் வசிப்பிடத்தின் மீது படாதபடி அமைக்க வேண்டும்.
ஆனால் பெரும்பாலான காற்றாலைகள் இதனை கடைபிடிப்பதில்லை.
யார் இந்த காற்றாலை மாஃப்பிக்கள்?
"யார் இவர்கள் என்றால் இவர் பெரிய நிறுவனங்களின் தலைவர்களோ அல்லது வெளிநாட்டவரோ அல்ல"
இவர்கள் காற்றாலை நிருவன பங்குதார்களோ,நிரவநர்களோ,அந்த நிருவனத்தில் வேலை புரிபவர்களோ அல்ல.பிறகு யார்தான் இவர்கள்? என்று கேட்கிறீர்களா?அதற்கு முன்பு ஆறம்ப கால நிறுவனங்கள் எங்கள் ஊர்களில் எப்படி செயல்பட்டது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.ஆரம்ப காலங்கள் அதாவது 15-20ஆண்டுகளுக்கு முன்பு காற்றாலைகள் இங்கு வர ஆரம்பித்தன அப்பொழுது வெளிநாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களை வைத்துக்கொண்டு கட்டுமான பணிகள் மற்றும் மேம்பாடுகளை கவனித்து வந்தனர்.உள்ளுரில் ஆள் பலம் உடைய சில நபர்கள் இந்த நிறுவனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துகறார்கள்.எப்படி என்றால்?காற்றாலை அமைக்க உதவும் பளுதூக்கி இயந்திரங்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் செல்ல 20-22 அடி பாதை தேவைப்படும்.இதனை தனக்கு சாதகமாக்கி கொண்ட இவர்கள் அந்த இயந்திரங்கள் செல்ல பயன்படும் பாதைக்கு சொந்த காரர்களை பயன்படுத்தியோ அல்லது அந்நிலங்களை தனதாக்கி கொண்டோ வாகனங்கள் செல்லும் பாதையெங்கும் அடியாட்களை வைத்து வழிமரித்தும் மன்கம்பங்களை சரித்தும் அட்டூழியம் செய்தனர்.இதனை சமாளிக்க முடியாத நிருவனங்கள் சமரசம் செய்ய முன்வந்தனர். இதனை பயன்படுத்தி பணம் கேட்டனர்.இதன் மூலம் இவர்கள் நன்கு சம்பாதிக்க ஆரம்பித்தனர்.ஒரு கட்டத்தில் காற்றாலை நிருவனங்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.அதாவது இப்படிபட்ட பலம்வாய்ந்தவர்களை நாம் வைத்துக்கொண்டாள் சுலபமாக உள்ளூர்வாசிஞளின் நிலபுலன்களை வாங்கி காற்றாலை நிறுவலாம் என எண்ணின.அதற்காக அந்த பிரமகர்களை அழைத்து ஒப்பந்தம் செய்து கொண்டது.அதாவது தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை பெற்று தரும்படியும்,இதற்கு சம்மதிக்கும் பட்சத்தில் உங்களுக்கு தனி அலுவலகம்,காற்றாலை அமைக்கும் பணிகள் மற்றும் அதன் மேம்பாட்டு பணிகள் மேற்பாற்வையிடும் பொருப்புகளையும் தருவதாக கூறினர்.மேலும் ஒவ்வொரு காற்றாலை பணி மடியும் போதும் சில கோடிகளையும் அழித்தனர்.
மாஃப்பியாக்கள் நிலங்களை அபகரித்த முறை:
ஏதோ சில லட்சங்களுக்காக வழிமரித்தவர்கள் கோடிகளை கண்டவுடன் சும்மா இருப்பார்களா?
இவர்கள் நிலங்களை கையகபடுத்த வியூகங்கள் மற்றும் சூழ்ச்சிகளை செய்தனர்.அவற்றில் சிலவற்றை இஙகு கூறுகிறேன்.
- ஒருவரின் பலகீனத்தை சாதகமாக்கிக்கொள்வது
- பணத்தின் ஆசையை காட்டுவது
- சம்பந்தப்பட்ட விவசாயிடம் அவருடைய நிலத்தை குறைவாக மதிப்பிட வைப்பதும்
- இவற்றிர்க்கு சரிப்பட்டு வராத பட்சத்தில் அடியாட்கள் வைத்து மிரட்டுவது
இப்படியாக தனது வேலைகளை முடித்ததால் பண மழையில் நனைந்தார்கள்.இதற்க்கு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளை தன் கைக்குள் போட்டுக்கொண்டனர்.
இவர்களால் நிகழ்ந்த சில சம்பவங்களை கீழே குறிப்பிடுகிறேன்:
(சுருக்கமாகவும் பெயர் கரிப்பிடாமலும் சொல்கிறேன்)
- பொதுவாக காற்றாலை அமைக்கும் போதும் நிலத்திற்கு சொந்தக்கார்களை அனுகும் போதும் இரவு நேர மது விருந்துகள் நடைபெறுவதுண்டு.அவ்வாறு 2002 காலக்கட்டத்தில் ஒரு 60 வயதுதக்க விவசாயிக்கு வெளிநாட்டு மதுக்களை அருந்த வைத்து குடிபோதையில் இருக்கும் போதே நிலத்தை எழுதிவாங்கிவிட்டனர்.தன் நிலம் கைவிட்டு போனதை அறிந்தவர் தற்போது மனநிலை பாதிப்புககுள்ளாகியுள்ளார்.
- ஏற்கனவே நிலம் கொடுத்த நபர் இறந்த பிறகு மீதமுள்ள அவருடைய நிலத்தையும் அபகரிக்க அவரது கடும்பத்தாருக்கு அடியாட்கள் மூலமாகவும் உள்ளூர் காவலதிகாரி மூலமும் தொந்தரவு அழித்து வருகிறார்கள்.
- ஓர் கணவனை இழந்தப்பெண் தன் இரு சிருவர்களுடன் தன் தாய் தனக்கழித்த 3சென்ட் நிலத்தில் வசித்து வருகறார் தன் தாயை அன்றி வேர் எவரும் ஆதரவு இல்லாத சூழ்நிலையில் அவர் வீட்டின் அருகே உள்ள விளைநிளத்தை காற்றாலைக்கு விற்கிறார். ஏற்கனவே நான் காற்றாலை அமைக்கும் விதிகளை கூரியிருந்தேன் அல்லவா அதற்கு பரம்பாக அமைத்தார்கள்.எவ்வாறு என்றால் காற்றாலையின் இறக்கை அவர்களின் வீட்டின் கூரையின் மேல் இருப்பது போல் அமைத்தார்கள்.அதனை எதிர்த்து காவல் நிலையத்திற்கு சென்றபோது முதலில் அவர்கள் சொல்வதை கேட்க சொன்னார்கள் அவர் கேட்காத பட்சத்தில் அஙகு அவமானபடுத்தப்பட்டார்.பின் அதே நாள் இரவு அடியாட்களால் தலையில் காயப்படுத்தப்பட்டார்.
- இச்சம்பவத்தில் ஓர் விவசாயி தன் விவசாய நிலத்தை தர மருக்கிறார்.அவருக்கு மிகுந்த நெருக்கடி கொடுக்கப்படுகிறது.அது ஒரு நாள் உச்சம் அடைந்து அவர் ஓர் பொது இடத்தில் அந்த பிரமுகராள் கொலை செய்யப்படுகிறார்.மறுநாள் நான்கு பேர் காவல் நிலையத்தில் தான்தான் செய்ததாக ஒப்புக்கொள்கிறார்கள்.அதில் ஒருவன் 18 வயதுடைய இளைஞன் ஆவான்.
இவ்வாறு இவர்களால் சிலர் உடைமைகளை இழந்தும் குடும்ப உரவினர்களின் உயிர்களை இழந்தும் அவதியுற்று வாழ்கிறார்கள்.
விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் ஏர்ப்பட்ட கொடுமை:
இந்த மாஃப்பியாக்கள் விவசாயிகளிடம் இருந்து நேரிடையாக சொத்துக்களை கைமாற்றுவதில்லை power of authority என்று தான் வாங்குவார்கள்.இதன் அர்த்தம் அவர்களுக்கு சொத்தை யாருக்கும் வழங்க உரிமை உள்ளது என்பதாகும்.இதனைப் பயன்படுத்தி இவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?
5ஏக்கர் நிலம் காற்றாலைக்கு கைமாற்றாபடுவதானால் காற்றாலைக்கு போக மீத நிலத்தை தன் பெயருக்கு மாற்றிக்கொள்வார்கள்.மற்றும் காற்றாலைக்கு இயற்கை வழங்களை சுரண்ட வேண்டிய அவசியம் இல்லை ஆனால் இந்த உலகமகா அறிவாளிகள் அவற்றையும் விட்டு வைக்கவில்லை.இவர்கள் வந்த பிறகு நுற்றூக்கணக்கான ஓடைகளும் குளங்களும் இருந்த இடம் தெரியாமல் மைதானம் போல ஆக்கிவிட்டனர்.இதர்க்கு ஒத்துளைத்த அதிகாரிகளை எப்படி வாழ்த்துரதுனே தெரியல.இந்த மாதிரி மிருகங்கள் மற்றும் இதற்கு துனைபோகிற அதிகார வர்க்கத்திர்கும் இடையேதான் நாம் வாழ்கிறோம்.எப்போதும் ஏழை எளிய மக்களுக்கான நீதி அதிகார வர்க்கத்தால் பறித்துக்கொண்டுதான் இருக்கறார்கள்.
ஏழைக்கொரு நீதி,அதிகாரத்திற்கு ஓர் நீதி
தற்சமயம் இவர்கள் பெரிய தனவானகவும்,அதிகாரம் படைத்தவர்களாகவும் உள்ளனர் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களோ தன் உடைமைகளையும் ஆதாரங்களையும் இழந்து கானப்படுகறார்கள்.சிலர் தனது சொந்த நிலத்திலேயே காற்றாலை காவலர்களாக உள்ளனர்.சரி விவசாயிகளைத்தான் சுரண்டினார்கள் என்றால் தன்னிடம் வேலைப்பாரபவர்களிடமாவது நல்ல விதமாக நடந்து கொள்கிறார்கள் என்றால் இல்லை .காற்றாலை காவலர்களுக்கு 2005
நிலவரப்படியே மாதம் ரூ.5000 நிர்வாகம் வழங்குகிறது. ஆனால் அவர்களுக்கு வெறும் ரூ.2000-ரூ.3000 மட்டுமே வழங்கப்படுகிறது.
எனது கருத்து:
இப்போது உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்று புரிகிறது . எல்லோரும் ஒரு விசயத்தை எளிதாக குறைகூரமுடியும் அதற்கு தீர்வழிப்பதும் செயல்படுத்துவதும் கடினம் என்று எண்ணுவீர்கள்.ஆனால் எனக்கு தெரிந்த தீர்வை சொல்ல விரும்புகிறேன். அது என்னவென்றால்
- பொதுவா வெளிநாடுகளில் காற்றாலை நிருவுவதற்கு விவசாய நிலங்களை முற்றிலுமாக வாங்காமல் தனது விதிமுறைக்குட்பட்ட மற்றும் தேவையான இடத்தின் உரிமைதாரரிடம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துகொள்வார்கள்.இதனால் நில உரிமையாளருக்கும் நிர்வாகத்துக்கும் எந்த பாதிப்பும் ஏர்ப்படாது.
- அல்லது, காற்றாலைக்குப் போக மீதமுள்ள நிலத்தை சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ அல்லது அரசாங்கத்தின் மூலம் விருப்பம் உள்ள விவசாயிகளுக்கு ஒப்பந்த முறையில் அந்த நிலத்தை அளிக்கலாம்.
- காற்றாலை நிர்வாகம் தயவு செய்து இந்த மாதிரியான உள்ளூர் ஆசாமிகளை நம்பி வேலைகளை ஒப்படைக்காமள் தகுந்த தகுதியுள்ள இளைஞர்கள் யாராளம் உள்ளனர் அவர்களை பனியில் அமர்த்துவதன் மூலம் மற்ற வில்லங்க பிரச்சினைகளை தவிர்க்களாம்.
- மேலும் தேவையில்லாமள் அழித்த அழிவுக்கள்ளாக்கிய ஆறு,குளங்கள் மற்றும் நீரோடைகளை நல்லெண்ணத்தின் படி சீரமைக்கலாம்.
இவ்வாறு செய்யும் பட்சத்தில் விவசாயிகளுக்கு காற்றாலை நிறுவனங்கள் மீது நன்மதிப்பு ஏர்படும்.எந்த ஒரு நிறுவனம் ஆனாலும் மக்களை ஒடுக்குவதன் மூலமோ அதிகாரத்தின் மூலமோ மக்களை எதிர்த்து அதிக நாட்கள் ஆலைகளை இயக்கிவிட முடியாது.
காற்றாலையுமானதுதான் அதே சமயம் விவசாயிகளின் நலனும் முக்கியமானது.ஆதலால்
"விவசாயம் காப்போம்! வழமான வாழ்க்கையைப் பெற்று வாழ்வோம் ! "
No comments:
Post a Comment